நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபி திறப்பு ! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 22, 2021

நாளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபி திறப்பு ! வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார் யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் எஸ். சிறீ சற்குணராசா மாரடைப்பினால் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் இன்று (வியாழக்கிழமை) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை பல்கலைக்கழக மாணவர்களால் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நினைவுத் தூபியினை காலை துணைவேந்தர் திறந்து வைக்கவிருந்த நிலையில் இன்றையதினம் அவர் மாரடைப்பினால் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி பல்கலைக்கழக நிர்வாகத்தினால் கடந்த ஜனவரி 8ஆம் திகதி இடித்து அழிக்கப்பட்டது.

எனினும் அதனைக் கண்டித்து எழுந்த மக்கள் எழுச்சியாலும் மாணவர்களின் போராட்டங்களினாலும் இருந்த இடத்திலேயே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைக்க பல்கலைக்கழக நிர்வாகம் இணக்கம் தெரிவித்தது.

அதனை அடுத்து பல்கலைக்கழக துணைவேந்தரினால் அடிக்கல்லும் நட்டுவைக்கப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனக் குறிப்பிடப்பட்ட பதாகை காட்சிப்படுத்தப்பட்டு நினைவுத் தூபியை மீள அமைக்கும் பணிகள் மாணவர்களின் பங்களிப்புடன் ஜனவரி 15ஆம் திகதி ஆரம்பமானது.

இந்நிலையில் அதன் கட்டுமான பணிகள் நிறைவிற்கு வந்துள்ள நிலையில், எதிர்வரும் 23ஆம் திகதி அதனை திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையிலையே துணைவேந்தர் மாரடைப்பு காரணமாக வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment