தேசிய வெசாக் நிகழ்வுகள் திட்டமிட்டவாறு நயினாதீவு நாக விகாரையில் இடம்பெறும் என யாழ். மாவட்ட செயலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் எதிர்வரும் நாட்களில் கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக, இன்று யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.
அதன் போது ஊடகவியலாளர், நாக விகாரையில் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறுமா ? என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், தேசிய வெசாக் நிகழ்வு என்பது தேசிய நிகழ்வு. அதனை நிறுத்துவது தொடர்பில் எமக்கு எந்த அறிவுறுத்தலும் எமக்கு கிடைக்கப் பெறவில்லை. அதனால் நிகழ்வு முன்னர் திட்டமிட்டவாறு நடைபெறும்.
சுகாதார விதிமுறைகளை பின் பற்றி, மட்டுப்படுத்தப்பட்டவர்களுடன் தேசிய வெசாக் நிகழ்வுகள் நடைபெறும் என தெரிவித்தார்.
தேசிய வெசாக் நிகழ்வுகள் எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையில் நயினாதீவு நாக விகாரையில் நடைபெறவுள்ளது. 24ஆம் திகதி சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை எதிர்வரும் மூன்று வார கால பகுதி எச்சரிக்கை மிக்க கால பகுதி எனவும், சுற்றுலா பயணங்களை தவிர்க்குமாறும், பண்டிகை நிகழ்வுகளை நிறுத்துமாறும் இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்” என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment