நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்துவதாகவும், சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - யோசனைகளை முன்வைத்துள்ள சிரேஷ்ட பௌத்த மதத் தலைவர்கள் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்துவதாகவும், சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாகவும் அறிவிக்க வேண்டும் - யோசனைகளை முன்வைத்துள்ள சிரேஷ்ட பௌத்த மதத் தலைவர்கள்

(இராஜதுரை ஹஷான்)

உத்தேச புதிய அரசிலமைப்பில் நாட்டின் பெயர் தனி சிங்கள இனத்தை பிரநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக அறிவிக்கப்படுவதுடன், தமிழ், ஆங்கிலம் மொழிகள் இரண்டாம் மொழியாக காணப்பட வேண்டும் என்று சிரேஷ்ட பௌத்த மதத் தலைவர்கள் யோசனைகளை முன்வைத்துள்ளார்கள்.

அதிகார பகிர்வு எவ்வழியிலும் இடம்பெறக்கூடாது. ஒற்றையாட்சியின் அம்சங்களை பாதுகாக்க விசேட பொறிமுறை செயற்படுத்தப்பட வேண்டும் எனவும் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபுணர் குழுவினரிடம் முன்வைத்துள்ள பரிந்துரைகளிலேயே இவ்விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

பண்டாரநாயக்க ஞாபகாரத்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் உள்ள உத்தேச புதிய அரசியலமைப்பு தொடர்பிலான நிபணர் குழுவிடம் நேற்று சனிக்கிழமை தமது யோசனைகளை முன்வைத்ததன் பின்னர் பௌத்த மத சிரேஷ்ட தலைவர்கள் ஊடகங்களுக்கு கூறியதாவது :

தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பெங்கமுவே நாலக தேரர்
புதிய அரசியலமைப்பில் இலங்கை குடியரசு நாடாக வலுப்படுத்தப்பட வேண்டும். அதிகார பகிர்வு எவ்விதத்திலும் இடம்பெறக்கூடாது.

மத்திய அரசாங்கத்தை அடிப்படையாகக் கொண்டு மாகாண சபை நிர்வாகம் முன்னெடுக்கப்பட வேண்டும். தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கும் போது இனம், மதம்  மற்றும் மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கக்கூடாது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல், பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல் ஆகிய தேர்தல்கள் நாட்டின் பிரதான தேர்தல்களாக காணப்பட வேண்டும். பல்வேறு வழிகளில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மாகாண சபைத் தேர்தல் குறித்து புதிய அரசியலமைப்பில் சிறந்த தீர்மானம் எடுப்பது அவசியமாகும்.

5 வருட கால பதவியில் இருக்கும் ஜனாதிபதிக்கு நாடு சொந்தமல்ல. ஜனாதிபதி தற்காலிக பொறுப்புதாரி மாத்திரமே தேசிய வளங்களை ஜனாதிபதி, அமைச்சரவை உறுப்பினர் ஆகிய குறுகிய தரப்பினரது தீர்மானத்தை கொண்டு மாத்திரம் கையாளக்கூடாது. தேசிய வளங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களின் அபிப்ராயத்தை கோருவது கட்டாயமானதாகும். இதற்கான வழிமுறைகள் புதிய அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

ஸ்ரீ ரோஹண பீடம் - மோரே கஸ்ஸப்ப தேரர்
நாட்டின் பெயர் சிங்கள இனத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாக காணப்பட வேண்டும். சிங்கள மொழி மாத்திரம் அரச கரும மொழியாக காணப்பட வேண்டும். தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகள் இரண்டாம் மொழியாக செயற்பட வேண்டும். புத்த மதத்தை பாதுகாக்கவும், வளர்ச்சி பெற செய்யவும் புதிய கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும்.

எல்லே குணவங்ச தேரர்
அரச அதிகாரத்துடன் சுற்றுச்சூழல் அழிக்கப்படுவதை காணக்கூடியதாக உள்ளது. இயற்கை வளங்களை பாதுகாக்க புதிய அரசியலமைப்பில் விசேட திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். மக்களின் உரிமைகளை பாதூக்கவும், நாட்டின் இறையான்மையினையினை பாதுகாக்கவும் விசேட பொறிமுறை வகுக்க வேண்டும்.

No comments:

Post a Comment