கரோலின், சுலா ஆகியோர் கைது - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

கரோலின், சுலா ஆகியோர் கைது

கடந்த வருடம் திருமதி உலக அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கரோலின் ஜூரி மற்றும் முன்னாள் மாடல் அழகி ச்சூலா பத்மேந்திர கைது செய்யப்பட்டுள்ளனர்.

அண்மையில் (04) இடம்பெற்ற திருமதி இலங்கை 2021 (Mrs. Sri Lanka 2021) போட்டியில் சர்ச்சைக்குள்ளான வகையில் நடந்து கொண்டு, அதில் வெற்றியாளராகத் தெரிவான திருமதி புஷ்பிகா டி சில்வாவை காயப்படுத்தி, அவமானப்படுத்திய சம்பவம் தொடர்பிலேயே குறித்த கைது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த இருவர் தொடர்பில் திருமதி புஷ்பிகா டி சில்வா வழங்கிய முறைப்பாட்டை அடுத்து, கொழும்பு கறுவாத்தோட்ட பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad