தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான விசேட அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் பொலிஸாருக்கான விசேட அறிவிப்பு

தனிமைப்படுத்தல் பகுதிகளில் வசிக்கும் பொலிஸார், அந்தந்த பகுதிகளில் தனிமைப்படுத்தல் உத்தரவுகள் நீக்கப்படும் வரை கடமைக்கு சமூகமளிக்க அவசியமில்லை என பிரதிப் பொலிஸ்மா அதிபரும், பொலிஸ் ஊடகப் பேச்சாளருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்தல் பகுதிகளுக்குள் சுகாதார அதிகாரிகளும், அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்கும் அதிகாரிகள் மாத்திரமே நுழைய முடியும் என்பதுடன் ஏனையோருக்கு அங்கு நுழைவதற்கோ, வெளியேறுவதற்கோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எவராவது தனிமைப்படுத்தல் பகுதியை விட்டு வெளியேறினால் அல்லது நுழைந்தால் அது தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறும் செயல் எனவும் பிரதிப் பொலிஸ்மா அதிபரும் அஜித் ரோஹன மேலும் கூறினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad