பாராளுமன்றத் தேர்தலை ஒத்தி வைத்தார் பாலஸ்தீன ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Friday, April 30, 2021

பாராளுமன்றத் தேர்தலை ஒத்தி வைத்தார் பாலஸ்தீன ஜனாதிபதி

வாக்குறிமை தொடர்பான பிரச்சினை காரணமாக பலஸ்தீன பாராளுமன்றத் தேர்தலை ஒத்திவைப்பதாக பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் அறிவித்துள்ளார். 

ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெரூசலத்தில் இருக்கும் பலஸ்தீனர்களுக்கு வாக்களிக்க இஸ்ரேல் அனுமதித்தால் மாத்திரமே இந்தத் தேர்தல் நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

எந்த கட்டுப்பாடும் விதிக்காது தேர்தலில் பங்கேற்பதற்கு அனுமதிப்பது பற்றி இஸ்ரேல் தரப்பில் தெளிவான எந்த பதிலும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

2006 ஆம் ஆண்டுக்கு பின்னர் பலஸ்தீனத்தில் முதலாவது பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதி தேர்தல்கள் மே மற்றும் ஜூலை மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. இதில் ஜனாதிபதி தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படுவது குறித்து எந்த தெளிவான அறிவத்தலும் வெளியிடப்படவில்லை. 

ஜனாதிபதி அப்பாஸ் தனது போட்டியாளர்கள் மத்தியில் கடும் சவாலை எதிர்கொண்டுள்ள நிலையில் இந்தத் தேர்தலில் அவரது கட்சி வெற்றி பெறுவது சந்தேகமாக இருந்த சூழலிலேயே இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நிறுத்தப்படுவது, கடந்த பல ஆண்டுகளில் நீடித்த பிளவை முடிவுக்குக் கொண்டுவந்து தேசிய ஐக்கியம் ஒன்றை ஏற்படுத்தும் எதிர்பார்ப்பை பலவீனப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது. 

கடந்த தேர்தலில் இடம்பெற்ற வன்முறைகளால் அப்பாசின் பத்தா கட்சி இஸ்ரேல் ஆக்கிரமிப்பு மேற்குக் கரையிலும் இஸ்லாமிய போராட்ட அமைப்பான ஹமாஸ் காசா பகுதியிலும் பிளவுபட்டு அட்சி புரியும் நிலை ஏற்பட்டது.

எதிர்வரும் தேர்தலை ரத்துச் செய்வது தொடர்பில் ஹமாஸ் அமைப்பு அப்பாஸை அண்மையில் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment