விழிப்புலனற்ற 13 வயது ஜீவந்தவுக்கு பார்வையளித்த பிரதமரின் பாரியார் - ரோஹித்தவின் கருணையால் உலகை காணும் வரம் கிடைத்தது - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

விழிப்புலனற்ற 13 வயது ஜீவந்தவுக்கு பார்வையளித்த பிரதமரின் பாரியார் - ரோஹித்தவின் கருணையால் உலகை காணும் வரம் கிடைத்தது

கலென்பிந்துனு​வெவ, பலுகொல்லேகம கிராமத்தை சேர்ந்த விழிப்புலனற்ற 13 வயதுடைய ஜீவந்த ரத்நாயக்க என்ற சிறுவனின் கண் பார்வைக்கான கோரிக்கை சமூக வலைத்தளம் ஊடாக பிரதமரின் இளைய மகனான ரோஹித் ராஜபக்‌ஷவின் கவனத்தை ஈர்த்தது.

இந்தச் சிறுவன் மீது ஏற்பட்ட ஆழ்ந்த அனுதாபத்தை தொடர்ந்து ரோஹித் ராஜபக்‌ஷ, இது தொடர்பில் தனது தாயார், பிரதமரின் பாரியாரான திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.

குழந்தைகள் மீது மிகுந்த கருணையும், அன்பும் மிகுந்த பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, கண் பார்வை கோரிய சிறுவனின் காணொளியை பார்த்து மிகவும் மனம் வருந்தினார்.

இச்சிறுவனுக்கு உலகைக் காண்பதற்கான அதிஷ்டம் கிட்டுமா? என சிந்தித்த திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ, ஜீவந்த ரத்நாயக்க சிறுவனை கொழும்புக்கு அழைத்து வந்தார். அது நாட்டின் மிகச்சிறந்த மற்றும் புகழ்பெற்ற கண் மருத்துவர்களில் ஒருவரைக் கொண்டு சிறுவனுக்கு கண் பரிசோதனைகளை நடத்தினார்.

கொழும்பு கண் மருத்துவமனையில் இச்சிறுவன் ஒரு நிபுணரின் பரிந்துரையின் பேரில் பல சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். சோதனை அறிக்கையின்படி, கண் மாற்று அறுவை சிகிச்சை இல்லாமல் சிறுவனின் ஒரு கண்ணுக்கு பார்வை கொடுக்க முடியும் என்று சிறப்பு மருத்துவர் முடிவு செய்தார். அதற்கு நீண்ட கால சிகிச்சை அவசியமென நிபுணர் பரிந்துரைத்தார்.

அதற்கான சகல சுமைகளையும் ஏற்றுக் கொள்வதற்கு திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷ தீர்மானித்தார். அன்று விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பிரதமரின் உத்தியோகப்பூர்வ இல்லத்தில் சந்தித்த விழிப்புலனற்ற ஜீவந்த ரத்நாயக்க சிறுவனை சகல பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளுக்கு உட்படுத்தி, பல சந்தர்ப்பங்களில் அவரை கொழும்பிற்கு அழைத்துவந்து சிகிச்சையளிப்பதற்கு பிரதமரின் பாரியார் நடவடிக்கை மேற்கொண்டார்.

சில மாதங்களின் பின்னர் ஜீவந்த ரத்நாயக்க அலரி மாளிகையில் பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவை மீண்டும் சந்திப்பது ஒரு கண்ணில் நூறுக்கு 30 வீதத்திற்கும் அதிகமான பார்வையுடனாகும்.

இச்சிறுவன் புத்தகங்களை வாசிப்பதற்கு முயற்சிப்பதுடன், தொலைக்காட்சி பார்த்தல், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு உலகை காண்கிறார்.

ஜீவந்தவிற்கு மேற்கொள்ளப்படும் சிகிச்சை இன்னும் நிறைவுபெறவில்லை. இன்றும் அவர் வைத்திய சிகிச்சைக்காகவே கொழும்புக்கு வருகை தந்துள்ளார். 

அதன்போது தனக்கு உலகை காண வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து தனது வாழ்வில் ஒளியேற்றிய திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷவை சந்தித்து வணங்கி நன்றி கூறுவதற்காகவே சிறுவன் அலரி மாளிகைக்கு வருகை தந்திருந்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad