கொவிட் தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - இந்திய அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

கொவிட் தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு எந்த தடையும் விதிக்கவில்லை - இந்திய அறிவிப்பு

கொவிட்-19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு இந்தியா எந்த தடையும் விதிக்கவில்லை என்று இலங்கையில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இந்திய உயர்ஸ்தானிகராலயம் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், புது டெல்லியில் உள்ள இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் 2021 ஏப்ரல் 2 அன்று கொவிட்-19 தடுப்பூசிகளின் ஏற்றுமதிக்கு தடை விதிக்கவில்லை என்று தெளிவாகக் கூறியதாகக் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொவிட் தடுப்பூசி விநியோகம் செய்யப்படும் 80 நாடுகளில் இலங்கையும் ஒன்று.

இந்த ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் இருந்து பரிசாக வழங்கப்பட்ட முறையாக அங்கீகரிக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கொவிட்-19 தடுப்பூசிகள் இலங்கையில் உள்ள பயங்கரமான தொற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி திட்டங்களுக்கு முதன்மையாக தொடங்கப்பட்டது.

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்ட் தடுப்பூசியின் 1.25 மில்லியனுக்கும் அதிகமான டோஸ்கள் இதுவரை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.

எந்தவொரு நாடும் தனது சொந்த மக்களுக்கு தடுப்பூசி போடும்போது வேறு நாடுகளுக்கு இந்த அளவு தடுப்பூசிகளை பகிர்ந்து கொள்ளவில்லை.

இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசிகளின் உற்பத்தி உள்நாட்டு தேவை மற்றும் உலகளாவிய தேவையை பூர்த்தி செய்வதற்காக மேலும் அதிகரித்து வருகிறது என்றும் இந்திய உயர்ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தடுப்பூசியின் ஏற்றுமதி குறித்து இந்திய வெளி­யு­ற­வுத்­துறை அமைச்­சின் செய்­தித் தொடர்­பா­ளர் அரிந்­தம் பக்சி கூறியுள்ளதாவது, “கொரோனா தடுப்­பூ­சி­களை வெளிநாடுகளுக்கு ஏற்­று­மதி செய்­வ­தற்­காக ‘வேக்­சின் மைத்ரி’ என்ற திட்­டத்தை இந்­தியா அமுல்­ப­டுத்­தி­யுள்­ளது.

“இந்­தத் திட்­டத்­திற்கு உலக நாடு­கள் ஆத­ரவு தெரி­வித்து வரு­கின்­றன.

“அதன்­படி, இத்­திட்­டத்­தின் மூலம் 80 நாடு­க­ளுக்கு மேலாக சுமார் 6 கோடியே 44 லட்­சம் தடவை போடக்­கூ­டிய தடுப்­பூ­சி­களை இந்­தியா அனுப்­பி­யுள்­ளது.

“இத­னால் இந்­தி­யா­விற்கு கொரோனா தடுப்­பூசி தட்­டுப்­பாடு ஏற்படும் என்று பயப்­ப­டத் தேவை­யில்லை. உள்­நாட்­டின் தடுப்­பூ­சித் தேவை­களை பூர்த்தி செய்த பின்­னரே வெளி­நா­டு­க­ளுக்கு அவற்றை ஏற்­று­மதி செய்­வ­தாக ஏற்­கெ­னவே தெரி­வித்­துள்­ளோம். இதனை உலக நாடு­கள் சரி­வர புரிந்­து­கொள்­ளும் என்று நம்­பு­கி­றோம்.

“எனவே வெளி­நா­டு­க­ளுக்கு தடுப்­பூசி ஏற்­று­மதி செய்­வ­தில் எந்தவொரு தடை­யும் பிறப்­பிக்க வில்லை. இந்­தி­யா­வின் பயன் பாட்டுக்­குப் போக எஞ்சி இருப்­பவை தொடர்ந்து ஏற்­று­மதி செய்யப்படும்,” என்று தெரி­வித்­தார்.

No comments:

Post a Comment