செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகொப்டர் தரையிறக்கம் - News View

About Us

About Us

Breaking

Monday, April 5, 2021

செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராகும் நவீன ஹெலிகொப்டர் தரையிறக்கம்

நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய பெர்சவரன்ஸ் விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியது.

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா என்பது குறித்து பல்வேறு ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிய ‘பெர்சவரன்ஸ்’ விண்கலம் கடந்த பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி செவ்வாய் கிரகத்தில் வெற்றிகரமாக தரை இறங்கியது. 

இது செவ்வாய் கிரகத்தில் உள்ள ஜெஸரோ பள்ளத்தாக்கு பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் உயிரினங்களுக்காக கரிம படிகங்கள் இருக்கின்றனவா என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக அங்கிருந்து சிறிய அளவிலான மாதிரிகளை இந்த விண்கலம் சேகரித்து பூமிக்கு அனுப்பி உள்ளது.

இந்த விண்கலத்தில் நவீன ஹெலிகொப்டர் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது பெர்சவரன்ஸ் ஆய்வு விண்கலத்துடன் 47.1 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்து செவ்வாய் கிரகத்துக்கு சென்றுள்ளது.

இந்த ஹெலிகொப்டர், பெர்சவரன்ஸ் ரோவரில் இருந்து இறங்கி செவ்வாய் கிரகத்தில் நிறுத்தப்பட்டுள்ள படத்தை நாசா வெளியிட்டுள்ளது. 

இந்த ஹெலிகொப்டர் செவ்வாய் கிரகத்தில் பறக்க தயாராக உள்ளது. இரவு நேரங்களில் இங்கு கடும் குளிர் நிலவுகிறது. இதனால் அங்கு ஹெலிகொப்டரில் பாகங்கள் உறைந்து பழுது ஆவதை தடுக்க இதில் வெப்பம் உண்டாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் வெப்பத்தை உருவாக்கி பேட்டரி மூலம் இந்த ஹெலிகொப்டரை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த ஹெலியில் உள்ள சூரிய சக்தி தகடு சரியாக செயற்படுவது பற்றி அடுத்த சில நாட்கள் சோதனை செய்யப்படவுள்ளது.

இந்த ஹெலி வரும் ஏப்ரல் 11 ஆம் திகதிக்கு முன்னர் செவ்வாயில் பறக்கவிடப்படவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.

பூமியின் அடர்த்தியில் ஒரு வீதத்தை கொண்டிருக்கும் செவ்வாய் வளிமண்டலத்தில் மேலெழுவது கடினமாக இருக்கும் நிலையிலேயே இன்ஜினியுட்டி ஹெலி பறக்க தயாராகி வருகிறது.

எனினும் பூமியில் இருந்து மூன்றில் ஒரு பங்கு மாத்திரம் ஈர்ப்புச் சக்தியை கொண்டிருப்பது செவ்வாயில் பறக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.

இந்த விமானம் முதலாவது பரத்திலின்போது 10 அடி மேலெழுந்து 30 விநாடிகள் நகர்ந்து பின்னர் தரையிறங்கவுள்ளது. அது பறக்கும்போது ஹெலியில் பொருத்தப்பட்டிருக்கும் கெமரா மூலம் படம் பிடிக்கும்.

No comments:

Post a Comment