இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் துரித தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
1971 என்ற துரித தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பயணிகள் ரயில் சேவைகள் தொடர்பிலான முறைப்பாடுகளை துரித தொலைபேசி இலக்கத்தினூடாக அறிவிக்க முடியுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், ரயில் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களையும் இந்த இலக்கத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தி அறிந்துகொள்ள முடியுமென ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment