சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளை பரப்பிய இளைஞன் கைது - கையடக்க தொலைபேசியும் கைப்பற்றல் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 29, 2021

சமூக வலைத்தளத்தில் போலிச் செய்திகளை பரப்பிய இளைஞன் கைது - கையடக்க தொலைபேசியும் கைப்பற்றல்

(எம்.மனோசித்ரா)

சமூக வலைத்தளங்களில் போலிச் செய்திகளை பரப்பியமை தொடர்பில் கம்பளை பொலிஸாரால் கம்பளை - கஹட்டபிட்டி பிரதேசத்தில் 19 வயதுடைய இளைஞனொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

புலனாய்வுப் பிரிவினரால் வழங்கப்பட்ட தகவல்களுக்கு அமையவே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் உபயோகித்த கையடக்க தொலைபேசி பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கம்பளை பொலிஸார் இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

கொவிட் பரவலுக்கு மத்தியில் இவ்வாறான போலியான செய்திகளும் அதிகளவில் பரப்படுகின்றன.

உண்மையான தகவல்களை பகிர்வதற்கு சகலருக்கும் உரிமை காணப்படுகிறது. ஆனால் மக்களை பதற்றமடையச் செய்யும் வகையில் செய்திகளை பரப்புவதற்கு இடமளிக்க முடியாது.

மக்களுக்கிடையில் பிரிவினையை தோற்றுவிக்கும் வகையில் போலிச் செய்திகளை பரப்புவதானது இலங்கையில் குற்றவியல் சட்டம் மற்றும் பொலிஸ் கட்டளை சட்டத்தின்படி தண்டனை வழங்கக் கூடிய குற்றமாகும். அதற்கமையவே இந்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad