சார் தாம் யாத்திரையை இடைநீக்கம் செய்தது உத்தரகாண்ட் அரசாங்கம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 29, 2021

சார் தாம் யாத்திரையை இடைநீக்கம் செய்தது உத்தரகாண்ட் அரசாங்கம்

உத்தரகாண்ட் அரசாங்கம் இந்த ஆண்டுக்கான சார் தாம் யாத்திரையை இடைநீக்கம் செய்வதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளது. இந்த யாத்திரை மே 14 ஆம் திகதி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது.

இது தொடர்பில் முதல்வர் தீரத் சிங் ராவத், "மாநிலத்தின் கொவிட்-19 நிலைமையைக் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு உத்தரகண்ட் அரசு சார் தாம் யாத்திரையை இடைநீக்கம் செய்துள்ளது. நான்கு கோயில்களின் பூசர்கள் மாத்திரம் சடங்குகள் மற்றும் பூஜைகள் செய்வார்கள்" என்று கூறியுள்ளார்.

பத்ரிநாத், கேதார்நாத், யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகியவையே உத்தரகண்ட் மாநிலத்தில் நான்கு யாத்திரை தலங்கள் ஆகும்.

உத்தரகண்டில் நேற்று புதன்கிழமை மாத்திரம் 6,054 புதிய கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 108 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இதனால் அங்கு பதிவான மொத்த கொரோனா நோயாளர்களது எண்ணிக்கை 1,68,616 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தோர் தொகையும் 2,417 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவின் இமயமலையில் உள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், கேதார்நாத் கோயில், கங்கோத்திரி கோயில் மற்றும் யமுனோத்திரி கோயில் ஆகிய நான்கு கோயில்கள் இந்துக்களின் புனித தலங்களைக் குறிப்பதாகும்.

ஆண்டுதோறும் கோடைகாலத்தில் இந்துக்கள் இந்நான்கு தலங்களுக்குக் பயணிப்பதை வடமொழியில் சார் தாம் யாத்திரை என்பர்.

No comments:

Post a Comment