இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார் - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவர் இளவரசர் பிலிப் காலமானார்

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் கணவரான, இளவரசரசர் பலிப் காலமானார்.

இதனை, எலிசபெத் மகாராணி அறிவித்துள்ளதாக, பிரித்தானிய அரச குடும்பத்திற்கான உத்தியோகபூர்வ சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் எலிசபெத் மகாராணியான, எலிசபெத் அலெக்ஸாண்ட்ரா மேரி விண்ட்சரின் (Elizabeth Alexandra Mary Windsor) கணவர் இளவரசர் பிலிப், டியுக் ஒப் எடின்பரோ (Prince Philip, Duke of Edinburgh) மரணிக்கையில் அவருக்கு வயது 99 ஆகும்.

இன்று காலை விண்ட்சர் கோட்டையில் இளவரசர் பிலிப் அமைதியாக மரணமடைந்ததாகவும், தனது அன்பு கணவரின் மரணம் தொடர்பில், ராணியார் ஆழ்ந்த துக்கத்தில் உள்ளதாகவும், அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் எனவும், அரச மாளிகை விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறைந்த இளவரசர் பிலிப், 1921ம் ஆண்டு கிரேக்க நாட்டில் பிறந்தார். 1947ம் ஆண்டு இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசபெத்தை திருமணம் செய்து கொண்டார். ஜூன் 10ஆம் திகதி 100 ஆவது பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 65 வருடங்கள் ராணிக்கு உதவியாக இருந்த பிலிப், கடந்த 2017ம் ஆண்டு தன்னை பொது வாழ்க்கையில் இருந்து விடுவித்துக் கொண்டார். 

இவர் துடிப்பாக இருந்த காலத்தில் ராணியின் ஆட்சிக்கு மிகவும் உதவியாக இருந்தார். இங்கிலாந்து அரச குடும்பத்தில் நீண்ட வருடங்கள் இளவரசராக இருந்தவர்.

பிலிப், கடந்த பெப்ரவரி 6ம் திகதி மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கனவே இருந்த இருதய நோய் மற்றும் நோய்த் தொற்றுக்காக சிகிச்சை பெற்று, வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று காலமாகியுள்ளார்.

No comments:

Post a Comment