முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக செயற்பட்டவர் கைது - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

முன்னாள் ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தில் வெள்ளை மாளிகையின் ஆலோசகராக செயற்பட்டவர் கைது

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவின் நிர்வாகத்தின் கீழ் வெள்ளை மாளிகையின் கல்வி ஆலோசகராக கடமையாற்றிய சேத் ஆண்ட்ரூ என்பவர் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுப் பாடசாலைகளிலிருந்து நூறாயிரக்கணக்கான டொலர்களை திருடியதாகவும், ஒரு அடமானத்தில் குறைந்த வட்டி விகிதத்தைப் பெறுவதற்காக நிதிகளை மோசடி செய்ய முயன்றதாகவும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

2005 ஆம் ஆண்டில் நியூயோர்க் நகரத்தை மையமாகக் கொண்ட பொதுப் பாடசாலைகள் வலையமைப்பை உருவாக்க ஆண்ட்ரூ உதவினார். மேலும் 2013 ஆம் ஆண்டில் அமெரிக்க கல்வித் துறையில் வேலைக்காக அங்கிருந்து வெளியேறினார்.

பின்னர் வெள்ளை மாளிகையில் கல்வி தொழில்நுட்ப அலுவலகத்தில் மூத்த ஆலோசகரானார். அங்கு அவர் தொடர்ந்து பொதுப் பாடசாலை வலையமைப்பில் கவனம் செலுத்தினார்.

ஆண்ட்ரூ 2016 நவம்பரில் வெள்ளை மாளிகையில் தனது பங்கை விட்டுவிட்டு, 2017 ஜனவரியில் பொதுப் பாடசாலை வலையமைப்போடு உறவுகளை துண்டித்தார்.

இந்நிலையில் 42 வயதான ஆண்ட்ரூ செவ்வாய்க்கிழமை நியோர்க்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad