திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

திருகோணமலை மாவட்டத்தில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

திருகோணமலை மாவட்டத்தின் மூன்று பொலிஸ் பிரிவுகளில் உள்ள 06 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்ர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன்படி உப்புவெளி, திருகோணமலை மற்றும் சீனன்குடா பொலிஸ் பிரிவுகளில் அமைந்துள்ள ஆறு கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அதன்படி, உப்புவெளி பொலிஸ் அதிகார பிரிவில் சுமேதகம்புர, திருகோணமலை பொலிஸ் அதிகார பிரிவில் மூதோவில், கோவிலடி, லிங்கநகர் ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

அத்துடன் சீனன்குடா பொலிஸ் அதிகார பிரிவின் சீனன்குடா மற்றும் காவட்டிக்குடா ஆகிய கிராம சேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

Post Bottom Ad