சிங்கராஜ வன அழிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல் - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 28, 2021

சிங்கராஜ வன அழிப்பிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி எழுத்தாணை மனு தாக்கல்

தேசிய மரபுரிமையான சிங்கராஜ வனத்தை சூழவிருந்த காடுகளை அழித்து சட்ட விரோதமான முறையில் முன்னெடுக்கப்படும் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள், கட்டட நிர்மாணம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கோரி சுற்றாடல் நீதி மையம் மற்றும் அதன் நிறைவேற்று பணிப்பாளர் ஹேமந்த விதானகே இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் எழுத்தாணை மனு தாக்கல் செய்துள்ளார்.

பல்வேறு தரப்பினரினால் முன்னெடுக்கப்படும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக சிங்கராஜ வனம் மற்றும் அதனை சூழவுள்ள வனப் பகுதிகளில் உயிர் பல்வகைமைக்கு மாத்திரமன்றி யானைகள் உள்ளிட்ட விலங்குகளுக்கும் பாரிய பாதிப்பு ஏற்படுவதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

மனுவின் பிரதிவாதிகளாக வனஜீவராசிகள் அமைச்சர், அமைச்சின் செயலாளர், வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், சுற்றாடல் அமைச்சின் செயலாளர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

Post Bottom Ad