தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லை - பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகின்றமையினால் நாட்டை உடனடியாக முடக்க வேண்டுமென பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தற்போதைய சூழ்நிலையில் நாட்டை முடக்குவதை தவிர வேறு எந்ததொரு மாற்று வழியும் இல்லையென அச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செயற்பாட்டினை விரைவாக முன்னெடுக்காவிடின் எதிர்வரும் காலத்தில் நாடு பெரும் ஆபத்தில் சிக்குவதற்கான அறிகுறிகள் காணப்படுகின்றன எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா உப கொத்தணி கண்டறியப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன எனவும் உபுல் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆகவே நாட்டை முழுமையாக முடக்கி உப கொத்தணிகளை கண்டறிந்து தேவையான நடவடிக்கையை விரைந்து எடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

No comments:

Post a Comment