மத்திய மலையக வீதிகளில் பாறைகள், மண்மேடு சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரிப்பு - எச்சரிக்கும் பொலிஸார் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 15, 2021

மத்திய மலையக வீதிகளில் பாறைகள், மண்மேடு சரிந்து விழும் சம்பவங்கள் அதிகரிப்பு - எச்சரிக்கும் பொலிஸார்

கொழும்பு - பதுளை பிரதான வீதி, நுவரெலியா - பதுளை வீதி வாகனப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடுவோர் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

மாலை வேளையில் இந்த பகுதிகளில் மிகுந்த பனிமூட்டம் காணப்படுவதினால் வாகன போக்குவரத்தின் போது மிகுந்த கவனம் செலுத்துமாறும் பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.

மத்திய மலையகப் பிரதேசம் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை காரணமாக வீதிகளிலும் ரயில் பாதைகளிலும் மண் மேடுகள் சரிந்து வீழ்ந்துள்ளன. 

பதுளை மாவட்டத்தில் ஹல்துமுல்ல, ஹாலிஎல உள்ளிட்ட பிரதேச செயலக பிரிவுகளில் இந்த நிலை காணப்படுகின்றது.

இதேவேளை, கொழும்பு - பதுளை பிரதான வீதியில் மரங்கஹவெல, ஹல்தும்முல்ல, தியதலாவ போன்ற பிரதேசங்களிலும், வெலிமட - பதுளை வீதியில் ஹாலிஎல, அம்பவக்க, மொரேதொட்ட பிரதேச வீதிகளிலும் மண் மேடு சரிந்து வீழ்ந்தமை மற்றும் கற்பாறைகள் வீழ்ந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கின்றன. 

ஹாலிஎல - அம்பவக்க பிரதேசத்தின் பிரதான வீதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததனால், வெலிமட - பதுளை வீதியில் நேற்றுமுன்தினம் வாகனப் போக்குவரத்து மூன்று மணி நேரம் தடைப்பட்டிருந்தது..

No comments:

Post a Comment