தேர்தல் முறைமையினை திருத்தம் செய்ய உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது - அரசியல் நோக்கங்கள் இன்றி ஜனநாயக கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும் : வலியுறுத்தும் பெப்ரல் அமைப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

தேர்தல் முறைமையினை திருத்தம் செய்ய உயர்மட்ட குழு நியமிக்கப்பட்டமை வரவேற்கத்தக்கது - அரசியல் நோக்கங்கள் இன்றி ஜனநாயக கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும் : வலியுறுத்தும் பெப்ரல் அமைப்பு

(செ.தேன்மொழி)

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையினை திருத்தம் செய்ய உயர்மட்ட குழுவை நியமிக்க உள்ளுராட்சி மன்றம் மாகாண சபைகள் அமைச்சு தீர்மானித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இக்குழு அரசியல் நோக்கங்கள் இன்றி உள்ளுராட்சி மன்றங்களின் தேவைக்காக ஜனநாயக கொள்கைகளை முன்னிலைப்படுத்தி செயற்பட வேண்டும் என்பது எமது நோக்கமாகும் என பெப்ரல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமை தொடர்பில் சில யோசனைகளை முன்வைத்துள்ள பெப்ரல் அமைப்பு, உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறைமையினை திருத்தம் செய்யவதற்காக நியமிக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவிடம் தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முறை திருத்த செயற்பாட்டின் போது கவனிக்கப்பட வேண்டிய மற்றும் கட்டாயம் பின்பற்றப்பட வேண்டிய சில விதிகள் காணப்படுகின்றன.

அதனடிப்படையிலே விகிதாசார முறைமை, பெண்களுக்கு 25 சதவீதம் பிரதிநிதித்துவம், தேர்தல் தொகுதிகள் என்பவற்றின் பாதுகாப்பும், உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைந்தது 30 சதவீதமாகவோ அல்லது அதனையும் விட குறைவாகவோ காணப்பட வேண்டியதும் கட்டாயமாகும்.

இந்நிலையில் மேற்கூறப்பட்ட விடயங்களை அடிப்படையாக கொண்டு, தேர்தல் தொகுதிகளை 20 சதவீதத்தால் குறைப்பதுடன், தேசியப்பட்டியலுக்காக வழங்கப்பட்டுள்ள சதவீதத்தை 40 - 30 வீதத்தால் குறைக்க வேண்டும்.

அவ்வாறு முடியாத பட்சத்தில் இதுவரை காலமும் பேணப்பட்டு வந்த 60 - 40 சதவீதத்தை 70 - 30 சதவீதமாக மாற்றி அமைக்க வேண்டும். வேட்பாளர்களின் வதிவிடங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான முறையொன்று பின்பற்றப்பட வேண்டும்.

மேலும் அரச சேவையாளர்கள் போட்டியிடும் பிரதேசங்களுக்கு அப்பாலும் பணிபுரிவதாக உறுதியளிப்பதுடன், வேட்பாளர்கள் அவர்களின் சொத்து விபரங்களை வேட்பு மனுவுடன் ஒப்படைக்க வேண்டும்.

இதேவேளை, வேட்பு மனுக்கள் தொழிநுட்ப காரணங்களை அடிப்படையாக கொண்டு மாத்திரமே தற்போது இரத்து செய்யப்படுகின்றன. இந்நிலையில், வேட்பாளர்கள் தாம் வசிக்கும் தேர்தல் தொகுதியின் ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

அரச சேவையாளராயின் குறித்த தேர்தல் தொகுதியில் கடமையாற்றவில்லை என சட்டரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆவணங்களை சமர்பிப்பதுடன், அரச சேவையாளராக இல்லாவிடின் அது தொடர்பில் உறுதிப்பிரமானம் பெற்றுக்கொள்ள வேண்டும். 

மேலும் சொத்து மதிப்பு ஆகிய விடயங்கள் தொடர்பில் வேட்புமனு தாக்கலின் போது கவனம் செலுத்தப்பட வேண்டும்.

தேர்தல் தொகுதியில் பெண்களுக்கு 25 சதவீத பிரதிநிதித்துவம் கட்டாயம் வழங்கப்பட வேண்டும். பெண் பிரதிநிதிகள் போட்டியிடுவதற்காக தேர்தல் தொகுதி 10 - 15 வரை அதிகரிக்கப்பட வேண்டும்.

தேர்தல் கால செலவுகளை மட்டுப்படுத்தல், இளைஞர்களுக்கு முன்னுரிமை, சுயாதீன குழுக்களின் தலைவர் வெளியேறுதல் இதனைக்காட்டிலும் உள்ளுராட்சி மன்றங்களிலுள்ள 15 அடிப்படை பிரச்சினைகள் கவனத்திற் கொண்டுவரப்பட்டுள்ளன.

சட்டக் கொள்கை மற்றும் தேர்தல் முறைமை மறுசீறமைப்பு ஆகிவை பெரும்பாலும் அரசியல் கட்சிகளின் தேவைக்காக உருவாக்கப்படுவதாக எமது குழுவினரின் அனுபவங்களின் பிரகாரம் தெரிந்துக் கொண்டுள்ளோம்.

இந்நிலையில் , பல்கலைக்கழக உபவேந்தர்கள், நிர்வாக சேவையின் உயர் அதிகாரிகள் இருவரை உள்ளடக்கிய குழு அரசியல் நோக்கங்கள் இல்லாமல், உள்ளுராட்சி மன்றங்களுக்கு தேவையான மற்றும் ஜனநாயக அடிப்படை கொள்கைக்கு அமைய தேவையான திருத்தங்களை செய்ய வேண்டும். எதிர்காலத்தில் உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சு முன்னெடுக்கும் சிறந்த செயற்திட்டங்களுக்கு எமது அமைப்பு ஒத்துழைப்பை வழங்கும்.

No comments:

Post a Comment