செய்யாத குற்றத்திற்காக 44 ஆண்டுகள் சிறை அனுபவித்தவர் இழப்பீடாக 750,000 டொலர்கள் மாத்திரம் கிடைத்ததற்கு எதிராக வழக்கு - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

செய்யாத குற்றத்திற்காக 44 ஆண்டுகள் சிறை அனுபவித்தவர் இழப்பீடாக 750,000 டொலர்கள் மாத்திரம் கிடைத்ததற்கு எதிராக வழக்கு

அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் தான் செய்யாத குற்றத்திற்காக 44 ஆண்டுகள் சிறை அனுபவித்த ரொன்னி லோங் என்பவருக்கு இழப்பீடாக 750,000 டொலர்கள் மாத்திரம் கிடைத்ததற்கு எதிராக வழக்குத் தொடுக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

கறுப்பினத்தவரான லோங், 1976ஆம் ஆண்டு வெள்ளையின பெண் ஒருவரை கற்பழித்ததாக குற்றம் சாட்டப்பட்டார். 

வெள்ளையினத்தவர்களை மாத்திரம் கொண்ட நீதிபதிகள் குழுவால் வழங்கப்பட்ட தீர்ப்பில் கற்பழிப்பு மற்றும் திருட்டுக் குற்றச்சாட்டில் லோங்கிற்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.

தான் நிரபராதி என்று தொடர்ந்து கூறி வந்த லோங் அந்த குற்றத்தை செய்யவில்லை என்பது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பரில் ஆளுநரினால் பொது மன்னிப்பு அளிக்கப்பட்டார்.

இந்நிலையில் 65 வயதாகும் லோங் சிறை அனுபவித்த ஓர் ஆண்டுக்கு தலா 50,000 டொலர்கள் இழப்பீடு வழங்கப்பட வேண்டிய நிலையில் அவரது 15 ஆண்டு சிறை காலத்திற்கே இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

“அவரது பெற்றோர்கள் இறக்கும்போதும், அவரது மகனின் பிறந்த நாட்கள் மற்றும் பட்டமளிப்பு விழாவிலும் அவர் சிறை அனுபவித்துக் கொண்டிருந்தார். 

அந்த 44 ஆண்டுகளில் அவர் எல்லாவற்றையும் இழந்துவிட்டார். அவருக்கு கிடைத்ததை விடவும் அதிகம் பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளார்” என்று லோங்கின் வழக்கறிஞர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment