வனுவாட்டுவில் கரையொதுங்கிய சடலத்தில் கொரோனா - தீவை விட்டு வெளியேற தடை - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 21, 2021

வனுவாட்டுவில் கரையொதுங்கிய சடலத்தில் கொரோனா - தீவை விட்டு வெளியேற தடை

பசிபிக் தீவு நாடான வனுவாட்டுவில் கரையொதுங்கிய சடலத்தில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அதன் பிரதான தீவில் இருந்து வெளிப் பயணங்களுக்கு மூன்று நாள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸ் நாட்டு மாலுமி ஒருவரின் சடலம் வனுவாட்டு கடற்கரையில் இருந்து கடந்த ஏப்ரல் 11 ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டது. 

அவரது கப்பல், அதற்கு ஒரு நாள் முன்னதாக அந்தத் தீவுகளின் மிகப்பெரிய நகரான போர்ட் விலாவிலிருந்து புறப்பட்டிருந்தது.

அந்த ஆடவர் எங்கு, எவ்வாறு உயிரிழந்தார் என்பதும் அவரது சடலம் கடலில் விழுந்தது எப்படி என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. 

300,000 பேர் வசிக்கும் தொலைதூர வனுவாட்டு தீவுகளில் வைரஸ் பரவல் ஏற்படாமல் இருக்க, நடவடிக்கை எடுத்து வருவதாக அரசாங்கம் தெரிவித்தது.

இதுவரை அந்த தீவுகளில் மூன்று கொரோனா தொற்று சம்பவங்களே பதிவாகியுள்ளன. இதன் முதல் கொரோனா தொற்று சம்பவம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பதிவானதோடு கடந்த மார்ச்சில் மேலும் இருவர் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

No comments:

Post a Comment