தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபா வரை அதிகரிப்பதற்கு எதிராக தோட்ட நிறுவனங்கள் கோரியிருந்த தடை உத்தரவை வழங்க மேன்முறையீட்டு நீதிமன்றம் மறுத்துள்ளது.
இதற்கமைய கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி தொடக்கம் தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த அடிப்படைச் சம்பளம் 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் வரை தொழில் வழங்குநர்கள் 1000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவது அவசியமாகும். இதற்கு மாறாக செயற்படுவோருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யும் அதிகாரம் தொழில் ஆணையாளருக்கு இருப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment