இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் நாளுக்குநாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மறுபுறம் பல்வேறு மாநிலங்களில் ஒட்சிசன் தட்டுப்பாடு, வைத்தியசாலைகளில் படுக்கை தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வைத்தியசாலைகளில் படுக்கைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வரும் நிலையில் உள்ளக விளையாட்டு அரங்குகள், வணிக வளாக கட்டிடங்கள், திருமண மண்டபங்கள் கொரோனா சிகிச்சை மையங்களாக மாற்றப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் வதோதரா மாவட்டம் ஜகாங்கீர்புரா பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசல் கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.
இந்த பள்ளிவாசலில் 50 நோயாளிகள் சிகிச்சை பெறும் வகையில் 50 படுக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குஜராத்தில் நேற்று ஒரேநாளில் 11 ஆயிரத்து 403 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று மட்டும் அங்கு 117 பேர் உயிரிழந்துள்ளனர்.
அம்மாநிலத்தில் கொரோனா பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 4 இலட்சத்து 15 ஆயிரத்து 972 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,59,170 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,53,21,089 ஆக அதிகரித்துள்ளது.
அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 1,761 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,80,530 ஆக உயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment