போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, April 9, 2021

போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட 7 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப் பொருட்கள்

வெளிநாடுகளிலிருந்து போலி முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட ஐந்து பொதிகளிலிருந்து ஒரு தொகை போதைப் பொருட்கள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் நேற்று மாலை கொழும்பு மத்திய அஞ்சல் பரிவர்த்தனையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதியானது 7 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த பொதிகள் வெரஹேர, ஹோமாகம மற்றும் கண்டி பகுதிளைச் சேர்ந்த முகவரிகளுக்கு இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஜேர்மன் ஆகிய நாடுகளிலிருந்து அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஊடகங்கள் முன்னிலையில் குறித்த பொதிகளை சுங்கப் பிரிவு அதிகாரிகள் நேற்று மாலை திறந்தனர்.

அவற்றிலிருந்து 4 மில்லியன் ரூபா பெறுமதியுடைய குஷ் எனப்படும் 278 கிராம் கஞ்சாவையும், 3 மில்லியன் ரூபா பெறுமதியான 'எக்ஸ்டஸி' என்று அழைக்கப்படும் 400 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்தனர்.

மேலதிக விசாரணைகளுக்காக இந்த போதைப் பொருட்கள் சுங்கப் பிரிவு அதிகாரிகளினால் பொலிஸ் போதைப் பொருள் பிரிவில் ஒப்படைக்கப்பட்டன.

No comments:

Post a Comment