கானா நாட்டில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 60 க்கும் மேற்பட்ட டொல்பின்கள் - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 6, 2021

கானா நாட்டில் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கிய 60 க்கும் மேற்பட்ட டொல்பின்கள்

ஆபிரிக்க நாடுகளில் ஒன்றான கானா கடற்கரையில் அண்மைய நாட்களில் 60 க்கும் மேற்பட்ட டொல்பின் மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளதாக அந்நாட்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த டொல்பின்களின் உடலில் எந்த காயமும் ஏற்படவில்லை, கடலில் நிறம் மற்றும் வெப்பம் என்பனவும் சாதாரண நிலையிலேயே உள்ளதாக கானாவின் மீன் வள ஆணையத்தின் நிர்வாக இயக்குனர் மைக்கேல் ஆர்தர்-டாட்ஸி ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் டொல்பின்களின் இறப்புக்கான காரணத்தை கண்டறிய, அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு எடுத்து செல்லப்பட்டுள்ளன.

இவற்றின் உயிரிழப்பு காரணமாக டொல்பின்கள் மற்றும் சமீபத்தில் பிடிக்கப்பட்ட ஏனைய மீன்களை உணவாக உட்கொள்வதற்கு எதிராக கானா அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேபோல் பெப்ரவரியில் மொசாம்பிக் கடற்கரையில் 111 டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment