5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியீடு - ஒன்லைன், மின்னஞ்சல் ஊடாக சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் மீள்திருத்த பெறுபேறுகள் வௌியீடு - ஒன்லைன், மின்னஞ்சல் ஊடாக சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானம்

2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில் பெறுபேறுகளின் மீள் திருத்த பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளதாக இலங்கை பரீட்சைத் திணைக்களம் இன்று அறிவித்துள்ளது.

அதன்படி மாணவர்கள் தற்சமயம் மறு திருத்த முடிவுகளை பரீட்சை திணைக்களத்தின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிடலாம்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் 11 ஆம் தேதி நாடு முழுவதும் பரவிய கொவிட்19 தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில் இப் பரீட்சைகள் நடைபெற்றன.

சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளின் கீழ் தேர்வை நடத்த கல்வி அமைச்சகம் தேவையான ஏற்பாடுகளை செய்திருந்தது.

331,741 விண்ணப்பதாரர்களில் 326,264 பேர் கடந்த ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை எழுதியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பரீட்சை முடிவுகள் நவம்பர் மாதத்தில் வெளியிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, ஒன்லைன் ஊடாகவும் மின்னஞ்சல் ஊடாகவும் பரீட்சைகள் திணைக்களத்தின் சேவைகளை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், 2001 ஆம் ஆண்டிற்கு பின்னர் கல்வி பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தர பரீட்சைகளின் சான்றிதழ்களை பெற்றுக் கொள்வதற்கு விண்ணப்பிக்க முடியும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

திணைக்களத்தின் இணையத்தளத்திற்கு பிரவேசித்து தேவையான தகவல்களை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மின்னஞ்சல் ஊடாகவும் விண்ணப்பிக்க முடியும் எனவும் பரீட்சைகள் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த மேலதிக தகவல்களை அறிந்துகொள்வதற்காக இரண்டு தொலைபேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

011 2 788 137 அல்லது 011 2 784 323 எனும் தொலைப்பேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்தி தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும்.

No comments:

Post a Comment

Post Bottom Ad