கொழும்பு - புறக்கோட்டையில் வங்கியொன்றின் ஊழியர்களுக்கு கொவிட் தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது.
வங்கியில் பணிபுரியும் 53 ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று, இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த வங்கி மூடப்பட்டு, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த ஊழியர்களுடன் தொடர்புடைய முதலாம் நிலை தொடர்பாளர்கள் இனங்காணப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர் சங்கத்தின் செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்தார்.
மேலும் குறித்த வங்கிக்கு வருகை தந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் சேகரிக்க ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
No comments:
Post a Comment