எவ்வித மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானம் - சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு - News View

About Us

About Us

Breaking

Tuesday, April 20, 2021

எவ்வித மே தின பேரணிகள், கூட்டங்களையும் நடத்தாதிருக்க தீர்மானம் - சர்வ கட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் முடிவு

(இராஜதுரை ஹஷான்)

மே தினத்தை முன்னிட்டு பொதுக் கூட்டங்களையும், பேரணிகளையும் நடத்தாமலிருக்க அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளதாக கொவிட்-19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதனடிப்படையில் மே தினக் கூட்டம் தொடர்பிலான முன்கூட்டிய நடவடிக்கைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

மே தினக் கூட்டம் தொடர்பில் அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், கொவிட்-19 ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலைய உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இன்று மத்திய நிலைய காரியாலத்தில் இடம்பெற்றது.

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன உள்ளிட்டோர் இக்கலந்துரையாடலில் கடந்து கொண்டனர்.

இப்பேச்சுவார்த்தையின் போது மே தினக் கூட்டத்தை நடத்தமாலிருக்க எடுக்க தீர்மானத்திற்கு அனைத்து கட்சி பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் இரண்டாம் சுற்று தாக்கத்தை தொடர்ந்து ஒரு சில மாதங்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தின் பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன இருப்பினும் ஒரு சில காரணிகளினால் கொவிட்-19 வைரஸ் பரவல் சடுதியாக பரவலடைந்துள்ளதை காண முடிகிறது.

தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாமல் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதை காண முடிகிறது.

இதன் காரணமாக அடுத்த நான்கு தொடக்கம் ஆறு வாரங்ளில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு விசேட வைத்தியர் சுதத் சமரவீர குறிப்பிட்டுள்ளார்

வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களில் தற்போது அதிகளவிலாள கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளார்கள்.

தொற்றாளர்களின் எண்ணிக்கை கடந்த காலங்களை காட்டிலும் நாளாந்தம் அதிகரித்த வண்ணம் உள்ளன. ஆகையால் மூன்றாம் சுற்று தாக்கத்திற்கான சாத்தியம் அதிகளவில் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழ் சிங்களை புத்தாண்டு காலத்தில் பொதுமக்கள் கொவிட்-19 வைரஸ் தாக்கத்தையும், பின்பற்றிய சுகாதார பாதுகாப்பு அறிவுறுத்தல்களையும் மறந்து பண்டிகை கால கொண்டாட்டங்களில் ஈடுப்பட்டதையும், பொருட்களை கொள்வனவு செய்ததையும் காண முடிந்தது.

இதன் காரணமாக எதிர்வரும் ஆறு வாரங்களில் கொவிட்-19 வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிக்க கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான பின்னணியில் மே தினக் கூட்டத்தை ஒன்றினைந்து நடத்துவதா அல்லது தனித்து நடத்துவதா என அரசியல் கட்சிகள் பேச்சுவார்த்தைகளில் ஈடுப்பட்டு வந்தன.

மே தினக் கூட்டம் தொடர்பிலான பேச்சுவார்த்தை கொவிட்-19 வைரஸ் ஒழிப்பு செயற்பாட்டு நிலையத்தில் இடம்பெற்றது.

தற்போதைய சுகாதார காரணிகளை கருத்திற்கொண்டு இம்முறை மே தினக் கூட்டம், பேரணி ஆகியவற்றை நடத்தாமலிருப்பது அவசியம் என செயற்பாட்டு நிலையத்தில் தலைவர் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா விடுத்த கோரிக்கைக்கு அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளும் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.

இதனடிப்படையில் மே தின கூட்டம் குறித்து அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்திருந்த அனைத்து நடவடிக்கைகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment