கோர விபத்தில் சிக்கி 51, 52, 20 வயது பெண்கள் பலி - முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் - லொறி சாரதியை கைது செய்ய வலை வீச்சு - News View

Breaking

Post Top Ad

Thursday, April 1, 2021

கோர விபத்தில் சிக்கி 51, 52, 20 வயது பெண்கள் பலி - முச்சக்கர வண்டி சாரதி படுகாயம் - லொறி சாரதியை கைது செய்ய வலை வீச்சு

நுவரெலியாவிலிருந்து எல்லை நோக்கிச் சென்ற முச்சக்கர வண்டியின் மீது கனரக லொறியொன்று மோதுண்டு குடைசாய்ந்ததில் முச்சக்கர வண்டியில் பயணித்த மூன்று பெண்கள் பலியனதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று (01) பிற்பகல் 1.00 மணியளவில் நுவரெலியா ஹக்கல் பூங்காவிலிருந்து 500 மீற்றர் தூரத்தில் அபாய வளைவில், நுவரெலியாவிலிருந்து சென்ற குறித்த முச்சக்கர வண்டியின் பின்னால் வந்த கனரக லொறி வேகக்கட்டுப்பாட்டை இழந்து மோதி குடைசாய்ந்துள்ளது.

விபத்தில் எல்ல பகுதியை சேர்ந்த 51, 52, 20 வயதுடைய மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் முச்சக்கர வண்டி சாரதி படுகாயமடைந்து நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லொறியின் சாரதியின் தவறினாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதோடு, லொறியின் உதவியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். 

லொறியின் சாரதி தப்பிச் சென்றுள்ளதாகவும் அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

உயிரிழந்தவர்களின் விபரம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவித்த பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தனர்.

(நோட்டன் பிரிட்ஜ் நிருபர் - எம். கிருஸ்ணா)

No comments:

Post a Comment

Post Bottom Ad