எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 21, 2021

எதிர்வரும் 27 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் திறக்கப்படமாட்டாது

நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை திறப்பது மேலும் 2 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார்.

இன்று (22) முற்பகல் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஏப்ரல் 27ஆம் திகதி பல்கலைக்கழகங்களை திறக்க முடிவு செய்யப்பட்டிருந்த போதிலும், இன்று காலை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடமிருந்து தமக்கு கிடைக்கப் பெற்ற ஆலோசனைக்கமைய, நாட்டின் தற்போதைய சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பல்கலைக்கழகங்களை திறப்பதை மேலும் இரு வாரங்களுக்கு ஒத்தி வைக்க தீர்மானித்துள்ளதாக, அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இதன்போது தெரிவித்தார்.

இது தொடர்பில் அனைத்து பல்கலைக்கழகங்களினதும் உப பீடாதிபதிகளுக்கும் இவ்வறிவித்தலை விடுப்பதோடு, இரு வாரங்களின் பின் நிலைமைகளை அவதானித்து, நாட்டிலுள்ள அனைத்து பல்கலைக்கழகங்களையும் திறக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, அவர் இங்கு சுட்டிக் காட்டினார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad