ஊவா மாகாணத்தில் 27 புதிய தேசிய பாடசாலைகள் - மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Thursday, April 8, 2021

ஊவா மாகாணத்தில் 27 புதிய தேசிய பாடசாலைகள் - மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டத்தில் தீர்மானம்

ஊவா மாகாணத்தின் மொனராகலை மாவட்டத்தில் 27 பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தும் நடவடிக்கைகளை, கல்வி அமைச்சு மேற்கொண்டுள்ளது.

மொனராகலை மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்ற போதே, மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.

27 பாடசாலைகளில் தமிழ்ப் பாடசாலையொன்றும், முஸ்லிம் பாடசாலையொன்றுமாக இரு தமிழ் மொழி மூல பாடசாலைகளும் அடங்கியுள்ளன.

மொனராகலை கல்வி வலயத்தின் ஸ்ரீ விபுலானந்தர் தமிழ் மத்திய மகா வித்தியாலயமும், பிபிலை கல்வி வலயத்தின் பக்கினிகா வெல முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயமுமாக இரண்டு தமிழ் மொழி மூல வித்தியாலயங்களே, தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

மொனராகலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும், பிபிலை கல்வி வலயத்தின் ஏழு மத்திய மகா வித்தியாலயங்களும், வெள்ளவாயா கல்வி வலயத்தின் ஐந்து மத்திய மகா வித்தியாலயங்களும், தனமல்விலை கல்வி வலயத்தின் ஆறு மத்திய மகா வித்தியாலயங்களுமாக 25 மத்திய மகா வித்தியாலயங்கள் தேசிய பாடசாலைகளாக தரமுயர்த்தப்படவுள்ளன.

குறிப்பிட்ட 25 பாடசாலைகளும் சிங்கள மொழி மூல பாடசாலைகளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

பதுளை விசேட நிருபர்

No comments:

Post a Comment