நாய் கடித்ததில் பெண்கள் உட்பட ஐவர் காயம் - புத்தளத்தில் சம்பவம் - News View

Breaking

Post Top Ad

Thursday, April 8, 2021

நாய் கடித்ததில் பெண்கள் உட்பட ஐவர் காயம் - புத்தளத்தில் சம்பவம்

புத்தளம், அநுராதபுரம் வீதியிலுள்ள சாலியவெவ சந்தியில், நாய் கடித்ததில் ஐவர் காயங்களுக்கு உள்ளாகினர்.

இவர்களில் இருவர் பெண்களாவர். இவர்கள், 74 மற்றும் 58 வயதுடையவர்களாவர். சிகிச்சைக்காக இவ்விரு பெண்களும் புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாலியவெவ சந்தியில் அமைந்துள்ள சிறிய வியாபார நிலைய உரிமையாளர்கள் இருவர் மற்றும் அந்த வியாபார நிலையங்களுக்கு வருகை தந்த மூவரையுமே, இந்த நாய் கடித்துள்ளது.

இதில், காயமடைந்த ஐவரில் மூவர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். குறிப்பிடத்தக்கது. இந்த நாய், ஏற்கனவே பலரைரைக் கடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

(புத்தளம் தினகரன் விசேட நிருபர்)

No comments:

Post a Comment

Post Bottom Ad