மாத்தளை மாவட்டத்தில் 24 மணி நேரத்துள் இறுதிக்கிரியைகளை நடத்துமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிப்பு - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

மாத்தளை மாவட்டத்தில் 24 மணி நேரத்துள் இறுதிக்கிரியைகளை நடத்துமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிப்பு

மாத்தளை மாவட்டத்தில் இடம்பெறுகின்ற சகல மரணங்களினதும் இறுதிக்கிரியைகள் 24 மணித்தியாலங்களுக்குள் நடத்துமாறு சகல பிரதேச செயலாளர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக மாத்தளை மாவட்ட மேலதிக செயலாளர் இஸான் விஜய திலக் தெரிவித்தார். 

கொரோனா வைரஸ் மற்றும் தொற்றுநோய்கள் பரவுவதை தடுக்கும் முகமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இது தொடர்பில் மாத்தளை மாவட்ட கொரோனா தடுப்பு விசேட கமிட்டி முடிவுகளை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

மாத்தளை மாவட்ட கொரோனா தடுப்பு விசேட கமிட்டியின் விசேட கூட்டம் மாவட்ட இணைப்பதிகாரி மேஜர் ஜெனரால் நிஸாந்த மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் ஆகியோரின் தலைமையில் தம்புள்ள பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது. 

இதன்போதே மரண கிரியைகளை 24 மணித்தியாலங்களுக்குள் மேற்கொள்வதற்கு முடிவெடுக்கப்பட்டதாக மேலதிக செயலாளர் இஸான் விஜய திலக் தெரிவித்தார்.

இதன் அடிப்படையில் மாத்தளை மாவட்ட சகல கிராம சேவகர் பிரிவுகளிலும் பணிபுரிகின்ற அரச உத்தியோகத்தர்களை இணைத்து நலன்புரிசங்கங்களை ஏற்படுத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

உக்குவளை நிருபர்

No comments:

Post a Comment

Post Bottom Ad