இலங்கையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்ற 22,919 நபர்கள் - News View

Breaking

Post Top Ad

Friday, April 30, 2021

இலங்கையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை பெற்ற 22,919 நபர்கள்

இலங்கையில் ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 22,919 ஆக அதிகரித்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸை நேற்று மாத்திரம் 19,474 பேருக்கு செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இலங்கை ஜனவரி 29 ஆம் திகதி தேசிய கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டத்தை தொடங்கியது, ஏப்ரல் 15 வரை 925,242 பேர் கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸை பெற்றனர்.

இந்நிலையில் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் பணிகள் செவ்வாய்க்கிழமை ஆரம்பாகியுள்ளது.

இதேவேளை நாட்டிலுள்ள 2,435 சீன நாட்டினருக்கும் சினோஃபார்ம் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad