சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகளுடனான மோதலின் பின்னர் காணாமல்போன 18 இந்திய பாதுகாப்பு படையினர்

சத்தீஸ்கா் மாநிலம் பிஜாபூா் மாவட்ட வனப் பகுதியில் மாவோயிஸ்டுகளுடன் சனிக்கிழமை நடைபெற்ற மோதலையடுத்து குறைந்தது 18 பாதுகாப்பு படையினரை காணவில்லை என்று இந்திய அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளனர்.

மாவோயிஸ்டுகளுடனான மோதலின் போது ஐந்து பாதுகாப்பு வீரர்கள் இறந்தனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர் என்று சத்தீஸ்கர் பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

அதேநேரம் இந்த மோதலில் பெண் மாவோயிஸ்ட் ஒருவரின் சடலமும் சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டது.

இது குறித்து சத்தீஸ்கர் காவல்துறை பணிப்பாளர் ஜெனரல் டி.எம். அவஸ்தி கூறுகையில், சில பாதுகாப்புப் பணியாளர்கள் காணவில்லை, தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது. உயிரிழந்த ஐந்து பணியாளர்களில், இருவரின் சடலத்தை நாங்கள் மீட்டுள்ளோம், மூன்று பேர் இன்னும் காட்டில் உள்ளனர் என்றார்.

மாவோயிஸ்டுகளின் கோட்டையாகக் கருதப்படும் தெற்கு பஸ்தார் காடுகளில் உள்ள பிஜாப்பூர் மற்றும் சுக்மா மாவட்டங்களில் இருந்து 2,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படைகளின் தனித்தனி கூட்டுக் குழுக்கள் மாவோயிச எதிர்ப்பு நடவடிக்கையைத் தொடங்கியதாக சத்தீஸ்கர் பொலிஸார் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment