அமெரிக்காவில் சுமார் 15 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வீணாயின - News View

About Us

About Us

Breaking

Friday, April 2, 2021

அமெரிக்காவில் சுமார் 15 மில்லியன் கொரோனா தடுப்பூசிகள் வீணாயின

தொழிற்சாலை தவறு காரணமாக ஜோன்சன் அன்ட் ஜோன்சன் நிறுவனத்தால் தயாரிக்கப்படும் சுமார் 15 மில்லியன் கொரோனா தடுப்பு மருந்துகள் விணாகியுள்ளன. இதனால் அந்த நிறுவனத்தின் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

மெரிலாண்ட், பல்டிமோரில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் தயாரிக்கப்பட்ட மருந்து தேவையான தரத்தை கொண்டிருக்கவில்லை என்று அந்த மருந்து உற்பத்தி நிறுவனம் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தது.

தடுப்பு மருந்துக்கான கலவை சேர்க்கையிலேயே பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக அமெரிக்க ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

எனினும் ஏற்கனவே விநியோகிக்கப்பட்ட மருந்தில் பாதிப்பு இல்லை என்றும் மருந்து உற்பத்தியில் தாமதம் ஏற்படும் என்றும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு முறை மாத்திரம் போடத்தக்கதான ஜோன்சன் அன்ட் ஜோன்சன் தடுப்பு மருந்து பைசர் மற்றும் மொடர்னா தடுப்பூசி போன்று உறைநிலையில் வைக்க வேண்டிய தேவை இல்லாததால் விநியோகிப்பது இலகுவாக உள்ளது.

No comments:

Post a Comment