இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதியளித்தார் சட்டமா அதிபர் - விபரம் இதோ! - News View

Breaking

Post Top Ad

Wednesday, April 7, 2021

இலங்கையில் 11 இஸ்லாமிய அமைப்புகளுக்கு தடை விதிக்க அனுமதியளித்தார் சட்டமா அதிபர் - விபரம் இதோ!

அடிப்படைவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய 11 இஸ்லாமிய அமைப்புக்களுக்கு தடைவிதிக்குமாறு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

குறித்த அமைப்புகளை தடைபெற்றுமாறு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதியளித்துள்ளதாக சட்டமா அதிபர் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த விடயத்தை சட்டமா அதிபரின் இணைப்பதிகாரி, அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன உறுதிப்படுத்தினார்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை அடுத்து, குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்புடைய மற்றும் தீவிரவாதத்தை தூண்டுகின்ற அமைப்புகளாக கருதப்படும் தேசிய தௌஹீத் ஜமாஅத் (NTJ) ஜமாஅத்தே மில்லத்து இப்ராஹிம் (JMI) மற்றும் விலாயத் அஸ்செய்லானி  ஆகிய அமைப்புகள் ஏற்கனவே தடை செய்யப்பட்டு அது தொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு தடை செய்யப்பட்டுள்ள 11 இஸ்லாமிய அமைப்புகள் 

1. யுனைடெட் தௌஹீத் ஜமாஅத் - United Thowheed Jamaath (UTJ)

2. சிலோன் தௌஹீத் ஜமாஅத் - Ceylon Thowheed Jamaath (CTJ)

3. இலங்கை தௌஹீத் ஜமாஅத் - Sri Lanka Thowheed Jamaath (SLTJ)

4. அனைத்து இலங்கை தௌஹீத் ஜமாஅத் - All Ceylon Thowheed Jamaath (ACTJ)

5. ஜம்இய்யத்துல் அன்சாரி சுன்னத்துல் மொஹமதியா - Jamiyyathul Ansaari Sunnaththul Mohomadiya (JASM)

6. தாருல் ஆதார் @ ஜமியுல் ஆதர் - Dharul Adhar @ Jamiul Adhar

7. இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம் - Sri Lanka Islamic Student Movement (SLISM)

8. இஸ்லாமிய அரசு ஈராக் & சிரியா (ஐ.எஸ்.ஐ.எஸ்) - Islamic State of Iraq & Syria (ISIS)

9. அல்கொய்தா - Al-Qaeda

10. சேவ் த பேர்ள்ஸ் Save the Pearls

11. சூப்பர் முஸ்லீம் - Super Muslim

ஆகியவற்றுக்கு தடை விதிக்க சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா அனுமதி வழங்கியுள்ளார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad