இலங்கையில் 1,111 கொரோனா தொற்றாளர்கள் - தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,873 பேர் - சிகிச்சை பெற்று வருவோர் 7,975 பேர் - News View

About Us

About Us

Breaking

Wednesday, April 28, 2021

இலங்கையில் 1,111 கொரோனா தொற்றாளர்கள் - தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,873 பேர் - சிகிச்சை பெற்று வருவோர் 7,975 பேர்

இலங்கையில் இன்று (28) காலை வரையில் 1111 கொவிட் வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக Covid 19 வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இவர்களில் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்த 15 இலங்கையர்கள் உள்ளடங்குவர். ஏனைய 1,096 பேரும் உள்நாட்டில் அடையாளம் காணப்பட்டவர்கள். இவர்களில் பெரும்பாலானோர் கொழும்பு மாவட்டத்திலிருந்து பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 200 ஆகும்.

இதற்கமைய கம்பஹா மாவட்டத்திலிருந்து 198 பேர் மற்றும் குருநாகல் மாவட்டத்திலிருந்து 119 பேரும் பதிவாகியுள்ளனர். ஏனைய 579 பேரும் நாட்டின் ஏனைய மாவட்டங்களிலிருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இன்று (28) காலை வரையில் மினுவாங்கொடை பிரண்டிக்ஸ் கொத்தணி மற்றும் கொழும்பு மீன் சந்தை கொத்தணியுடன் தொடர்புகளை கொண்டிருந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 98,237 ஆகும். இவர்களில் 93,456 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். கொழும்பு மீன் சந்தை கொத்தணி எண்ணிக்கை 95,178.

இதேவேளை, இன்று (28) காலை வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 103,486 பேர். இவர்களில் 94,856 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். 

அத்துடன் இன்று காலை (28) வரையிலும் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களில் 7,975 தொற்றாளர்கள் மேலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இன்று (28) காலை 6.00 மணி வரையிலான கடந்து 24 மணித்தியாலங்களுக்குள் வைத்தியசாலைகள் மற்றும் இடைநிலை சிகிச்சை நிலையங்களிலிருந்து 2,79 பேர் பூரண குணமடைந்து வெளியேறியுள்ளனர்.

இதேவேளை, இன்று (28) காலை வரையிலான கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்கள் அம்பகாஹபெலஸ்ச, பொல்கொல்ல, ஹெட்டிபோல, மதுகம, நுகேகொட, பன்னிபிட்டிய, வத்தளை, மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.

இதன்படி, இன்று (28) காலை 6.00 மணி வரையிலும் இலங்கையில் கொவிட் வைரஸ் தொற்று பாதிப்பினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 655 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், இன்றையதினம் வரையிலும் முப்படையினரால் பராமரிக்கப்பட்டு வரும் 113 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 10,873 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் இன்று (28) காலை வரையிலும் குருநாகல் மாவட்டத்தில் குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிட்குட்பட்ட தித்தவெல்கம, குபுக்கெடே கிராம சேவகர் பிரிவு நிராவிய மற்றும் நிததலுபொத ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை, களுத்துறை மாவட்டத்தில் அதிகாரிகொட, மிரிஸ்வத்த, பெலவத்த வடக்கு மற்றும் பெலவத்த கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், கம்பஹா மாவட்டத்தில் பொல்ஹென, ஹீரளுகெதர, கலுஅக்கல, அஸ்வென்னவத்த கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள், திருகோணமலை மாவட்டத்தில் பூம்புகார் கிராம சேவகர் பிரிவு, காலி மாவட்டத்தில் இம்பலகொட மற்றும் கடுதம்பே கிராம சேவகர் பிரிவுகள், பொலன்னறுவை மாவட்டத்தில் சிரிகெத கிராம சேவகர் பிரிவு மற்றும் மாத்தளை மாவட்டத்தில் பல்லேகும்புற கிராம சேவகர் பிரிவு மற்றும் தம்புள்ள பொருளாதார மத்திய நிலையம் என்பன தனிமை படுத்தப்பட்டுள்ளதாக Covid -19 வைரஸ் வைரஸ் பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம்

No comments:

Post a Comment