வவுனியாவில் புதையல் தோண்டிய இரு பிக்குகள் உட்பட 11 பேர் கைது - News View

About Us

About Us

Breaking

Sunday, April 4, 2021

வவுனியாவில் புதையல் தோண்டிய இரு பிக்குகள் உட்பட 11 பேர் கைது

வவுனியா தாலிக்குளம் பகுதியில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் 11 பேரை பூவரசங்குளம் பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.

தாலிக்குளம் முத்துமாரி அம்மன் கோவில் வளாகத்தில் புதையல் தோண்டப்படுவதாக பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து இன்றையதினம் அதிகாலை குறித்தபகுதிக்கு சென்ற பொலிசார் நிலத்தை தோண்டிக் கொண்டிருந்த இரு பிக்குமார் உட்பட 11 பேரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து நிலத்தை தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் மீட்கப்பட்டதுடன், 2 கார்கள் மற்றும் முச்சக்கர வண்டியையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்,

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment