கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை உலக மரபுரிமையாக பெயரிட UNESCO ஆலோசனை - News View

Breaking

Post Top Ad

Friday, March 19, 2021

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை உலக மரபுரிமையாக பெயரிட UNESCO ஆலோசனை

கண்டி தலதா மாளிகையின் எசல பெரஹராவை உலக மரபுரிமையாக பெயரிட ஆலோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக UNESCO வின் இலங்கை காரியாலயம் தெரிவித்துள்ளது.

இந்த ஆலோசனையை பாரிஸில் அமைந்துள்ள UNESCO அமைப்பின் தலைமையகத்திற்கு முன்வைக்க திட்டமிட்டுள்ளதாக பொதுச் செயலாளர் பேராசியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்தார். “அருவமான மரபுரிமை” என அதற்கு பெயரிடப்படவுள்ளது. 

இதனைத் தவிர, நாட்டில் முதலாவதாக அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் அபய வாவி எனப்படும் வசப குளத்தை உலக மரபுரிமையாக பெயரிட நீர்ப்பாசன அமைச்சு ஆலோசனையை முன்வைத்துள்ளதாக பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்தார்.

UNESCO விடம் சமர்ப்பிக்கப்பட்ட திட்டங்களில் எல்லங்கா வாவி அமைப்பு மற்றும் ராஜகல தொல்பொருள் தளம் உலக பாரம்பரிய தலங்களாக நியமிக்க உள்ளடக்கப்பட்டுள்ளன.

அடுத்த மாதம் 24 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள செயலமர்வில் தொல்பொருள் மற்றும் கலாசாரத் துறையைச் சேர்ந்த 24 பேராசிரியர்களுடன் கலந்தாலோசித்து இதற்கான திட்டம் தயாரிக்கப்படுமென பேராசிரியர் புஞ்சி நிலமே மீகஸ்தென்ன தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Post Bottom Ad