CCTV மூலம் கைதாகிய 4 மாணவர்களுக்கும் பிணை - கல்லூரி மாணவர் தலைவர்கள் என்பதால் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு - மேலும் மூவரைத்தேடி பொலிஸார் வலை வீச்சு - - News View

About Us

About Us

Breaking

Saturday, March 27, 2021

CCTV மூலம் கைதாகிய 4 மாணவர்களுக்கும் பிணை - கல்லூரி மாணவர் தலைவர்கள் என்பதால் எச்சரித்து பெற்றோரிடம் ஒப்படைப்பு - மேலும் மூவரைத்தேடி பொலிஸார் வலை வீச்சு -

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் வீட்டின் முன்னால் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபர்கள் 04 பேர் 02 மோட்டார் சைக்கிள்களுடன் பொலிஸாரால் நேற்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட போது நான்கு மாணவர்களும் மாணவர் தலைவர்களாக இருப்பதால் நான்கு பேரையும் கடுமையான எச்சரிப்புடன் தலா 50 ஆயிரம் ரூபா வீதம் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.

நேற்று நீதிமன்றத்துக்கு அவர்களது பெற்றோரும் வருகை தந்திருந்ததாக யாழ். பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

விசாரணைகளின் போது இந்த வீடு பாராளுமன்ற உறுப்பினரின் வீடுதான் என்பது தமக்கு தெரியாதென்றும் தெரிந்திருப்பின் வந்திருக்க மாட்டோம் என்றும் பொலிஸாரிடம் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 03 பேர் கைது செய்யப்படவுள்ளதாகவும் மேலும் 03 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்படவுள்ளதாகவும் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள 03 மோட்டார் சைக்கிள்களும் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அங்கிருந்த மோட்டார் சைக்கிள் மீது நடத்திய தாக்குதல் காரணமாக சுமார் 10,000 ரூபா முதல் 15,000 ரூபா வரையிலான நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த யாழ். பொலிஸார் சீ.சீ.ரி.வி தரவுகளை பயன்படுத்தி நேற்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் 04 பேரையும் கைது செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ்ப்பாணம் கநிருபர் - சுமித்தி தங்கராசா)

No comments:

Post a Comment