கிழக்கு மாகாண முதலமைச்சின் பிரதம கணக்காளராக எம்.ஐ.எம். முஸ்தபா கடமையை பொறுப்பேற்றார் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

கிழக்கு மாகாண முதலமைச்சின் பிரதம கணக்காளராக எம்.ஐ.எம். முஸ்தபா கடமையை பொறுப்பேற்றார்

கிழக்கு மாகாண உள்ளூராட்சி, கிராமிய அபிவிருத்தி, கிராமிய தொழிற்துறை, சட்டமும் ஒழுங்கும், நிதி, போக்குவரத்து, சுற்றுலாத்துறை, கட்டிடங்கள் மற்றும் வீடமைப்பு அமைச்சின் (கிழக்கு மாகாண முதலமைச்சின்) பிரதம கணக்காளராக எம்.ஐ.எம். முஸ்தபா திங்கட்கிழமை (22) தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் வருடாந்த இடமாற்ற கட்டளைக்கிணங்க தனது கடமையை பொறுப்பேற்றுள்ளார்.

கடந்த 1992 ஆம் ஆண்டு இலங்கை கணக்காளர் சேவையில் இணைந்து கொண்ட அக்கரைப்பற்றைச் சேர்ந்த எம்.ஐ.எம். முஸ்தபா, யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் வியாபார நிர்வாக துறையில் பட்டம் பெற்றுள்ளார். 

இலங்கை அபிவிருத்தி நிர்வாக நிறுவகத்தில் பொது நிதி மற்றும் முகாமைத்துவத்தில் பட்டப்பின் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

இப்பதவியேற்பு நிகழ்வில், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யு.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண திறைசேரியின் கொடுப்பனவு மற்றும் பெறுகையின் பிரதம கணக்காளர் எம். கலைஞானசுந்தரம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நஸீல், பொத்துவில் பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் வை.றாசித் உள்ளிட்ட பிரதேச செயலகங்களின் கணக்காளர்கள் கலந்து கொண்டனர்.

(நிந்தவூர் நிருபர்)

No comments:

Post a Comment