7 மில்லியன் “ஸ்புட்னிக் வி” ரஷ்ய தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

7 மில்லியன் “ஸ்புட்னிக் வி” ரஷ்ய தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானம்

(எம்.மனோசித்ரா)

ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசிகளை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக உபயோகிப்பதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய 7 மில்லியன் தடுப்பூசிகளை முதற்கட்டமாக கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

கொவிட்-19 வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக இலங்கையின் சனத் தொகையில் 14 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது.

அதன் ஆரம்ப கட்டமாக 5 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி வழங்குவதற்கு சுகாதார அமைச்சினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய ரஷ்யாவில் தயாரிக்கப்படும் ஸ்புட்னிக் வி தடுப்பூசியை இலங்கையில் அவசர பயன்பாட்டுக்காக தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.

அதற்கமைய அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவின் பரிந்துரைக்கமைய 7 மில்லியன் ஸ்புட்னிக் தடுப்பூசிகளை 69.65 மில்லியன் அமெரிக்க டொலருக்கு கொள்வனவு செய்வதற்கு சுகாதார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment