முன்னாள் நிதியமைச்சர் ரவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 24, 2021

முன்னாள் நிதியமைச்சர் ரவி உள்ளிட்டோரின் விளக்கமறியல் நீடிப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட 8 சந்தேகநபர்களுக்கும் எதிர்வரும் மார்ச் 30ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.

மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றத்தினால் குறித்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் 29, 31ஆம் திகதிகளில் இடம்பெற்ற, இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி ஏலத்தினை முறைகேடாக பயன்படுத்தியதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் ரூபா 3,689 கோடி (ரூ. 36.89 பில்லியன்) நஷ்டத்தை ஏற்படுத்தியதாக, குறித்த சந்தேகநபர்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கடந்த மார்ச் 18ஆம் திகதி மூவரடங்கிய விசேட மேல் நீதிமன்றில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, சந்தேகநபர்களுக்கு நேற்று (23) வரை விளக்கமறியல் விதித்த நீதிமன்றம் மீண்டும் இன்றையதினம் (24) விளக்கமறியலை நீடிப்பதாக நேற்று அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment