திருக்கோவிலில் ஆற்று மணல் இல்மனைற் அகழ்வுக்கு தடை - பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம் - News View

About Us

About Us

Breaking

Friday, March 5, 2021

திருக்கோவிலில் ஆற்று மணல் இல்மனைற் அகழ்வுக்கு தடை - பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

திருக்கோவில் பிரதேசத்தில் ஆற்று மணல், இல்மனைற் அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

திருக்கோவில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரனின் ஏற்பாட்டில் மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யு.டீ.வீரசிங்கத்தின் தலைமையில் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் புதன்கிழமை (3) இடம்பெற்றது.

இக்கூட்டத்தில், அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன், திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ஆர். கமல்ராஜன், அம்பாறை மாவட்ட பொதுஜன பெரமுன இணைப்பாளர் சாந்தலிங்கம், காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கி.ஜெயசிறில் ஆகியோரின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

திருக்கோவில் பிரதேசத்தில் 03 பாரிய நீர்ப்பாசனக் குளங்களும் 75 விவசாயக் குளங்களும் உள்ளன. குறித்த நீர்ப்பாசன விவசாயக் குளங்களை புனரமைப்புச் செய்ய வேண்டும் என பிரதேச செயலாளர் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவற்றில் முதலில் 05 குளங்களை புனரமைப்புச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

ஆறுகளைத் தோண்டுவது என்ற போர்வையில் மணல் அகழ்வது தடை செய்யப்பட வேண்டும் என்ற பிரேரணை ஏற்றுக் கொள்ளப்பட்டு இனிமேல் அப்படியான தேவை வரும்போது உள்ளுர் சமுர்த்தி மக்களைக் கொண்டு அகழ்வதென தீர்மானிக்கப்பட்டது. 

பிரதேசத்திலுள்ள 25 கிலோ மீற்றர் விவசாயப் பாதைகள் புனரமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் ஏற்றுக் கொள்ளப்பட்டது. 

இல்மனைற் அகழும் திட்டத்தை மக்கள் விரும்பவில்லையென பிரதேச செயலர் கூறியபோது அத்திட்டத்திற்கு தடை விதிப்பதென தீர்மானிக்கப்பட்டது. 

மக்களது காணிகள் பல வன பரிபாலனத்துக்கு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு இராஜாங்க அமைச்சர் விமல வீரதிசாநாயக்க தலைமையில் கூட்டத்தை நடாத்தி முடிவெடுப்பது என தீர்மானமாகியது.

(காரைதீவு நிருபர்)

No comments:

Post a Comment