இந்திய, உத்தரகாண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா - News View

Breaking

Post Top Ad

Monday, March 22, 2021

இந்திய, உத்தரகாண்ட் மாநில முதலமைச்சருக்கு கொரோனா

உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திராத் சிங் ராவத்துக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இந்திய நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே கடந்த ஆண்டு நோய் பரவியபோது பல முக்கிய பிரமுகர்களும் தொற்றுக்கு ஆளானார்கள்.

இந்த நிலையில் இப்போதும், பல பிரமுகர்களை நோய் தாக்கியுள்ளது. உத்தரகாண்ட் மாநில முதலமைச்சர் திராத் சிங் ராவத்தையும் கொரோனா பாதித்து இருக்கிறது. இதையடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இது சம்பந்தமாக திராத் சிங் ராவத் டுவிட்டரில் ஒரு செய்தி வெளியிட்டுள்ளார். எனக்கு நோய் தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து வைத்தியரின் கண்காணிப்பின் கீழ் நான் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறேன். 

சமீப காலத்தில் என்னோடு தொடர்பில் இருந்தவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும் படி கேட்டுக் கொள்கிறேன். மேலும் அவர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

திராத் சிங் ராவத் விரைவில் 4 நாள் பயணமாக டெல்லிக்கு வர திட்டமிட்டு இருந்தார். அப்போது பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் பல்வேறு அமைச்சர்களை சந்திப்பதாக இருந்தது.

இந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதால் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Post Bottom Ad