நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ள பசறை பஸ் விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை - News View

Breaking

Post Top Ad

Wednesday, March 24, 2021

நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ள பசறை பஸ் விபத்து தொடர்பான முழுமையான அறிக்கை

பசறை 13ஆம் கட்டை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பேருந்து விபத்து தொடர்பான முழுமையான அறிக்கையை நாளைமறுதினம் நீதிமன்றில் சமர்ப்பிக்கவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட சகல விசாரணைகள் தொடர்பிலான தகவல்களையும் நீதிமன்றில் முன்வைக்கவுள்ளதாக பசறை காவல்துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

தனியார் பேருந்து ஒன்று பசறை 13ஆம் கட்டை பகுதியில் 300 அடி பள்ளத்தில் கடந்த சனிக்கிழமை வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் பேருந்தில் பயணித்த 15 பேர் உயிரிழந்ததுடன், 33 பேர் காயமடைந்தனர்.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களிடமும் இது தொடர்பிலான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

அத்துடன் அந்த வீதியினது தரம் குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆராய்வதற்காக பெருந்தெருக்கள் அமைச்சின் செயலாளரின் கண்காணிப்பின் கீழ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Post Bottom Ad