"கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல். ஜவாஹீர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்" - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 2, 2021

"கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல். ஜவாஹீர் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்"

(சர்ஜுன் லாபீர்)

கல்முனை பிரதேச செயலக கணக்காளராக யூ.எல். ஜவாஹீர் இன்று (02) தனது கடமைகளை கல்முனை பிரதேச செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

நாவிதன்வெளி பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றிய இவர் இன்று முதல் கல்முனை பிரதேச செயலக கணக்காளராக கடமையாற்றவுள்ளர்.

இலங்கை கணக்காளர் சேவை முதலாம் தரத்தினை சேர்ந்த யூ.எல். ஜாவாஹீர் காரைதீவு, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலகங்களில் கணக்காளராக கடமையாற்றியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே லியாகத் அலி, கல்முனை வலயக் கல்வி பணியகத்தின் கணக்காளர் கே.ரிஸ்வி யஹ்சர், உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம். ரம்சான், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம். சாலீஹ், மேலதிக மாவட்ட பதிவாளர் எம்.ரி.எம். கலீல், கிராம நிர்வாக சேவை உத்தியோகத்தர் யூ.எல். பதிருத்தீன், பிரதேச ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் கே.எல். யாஸீன் பாவா, நலன்னோம்பல்.அமைப்பின் செயலாளர் எம்.எம்.ஹசன் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment