கடந்த அரசாங்கத்தில் வீடற்றவர்களுக்கு வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்காக மக்களுக்கு வீடமைப்புக் கடன்கள் வழங்கப்பட்டது ஆனால் தற்போதைய அரசாங்கத்தினால் “உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” கிராமிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மக்களுக்குக் கொடுக்கப்படும் நிதி உதவிகள் திருப்பிப் பெறப்படாது என்று கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் இந்திக அனுருத்த தெரிவித்தார்.
“உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” வீட்டுத் திட்டம் உயர் நிர்வாகத்துடன் கூடிய தரமான திட்டமாகும்இ இந்தத் திட்டத்தின் மூலம் உண்மையான வீட்டுத் தேவையூள்ள ஏழை மக்களுக்கு மட்டுமே வீட்டு வசதி வழங்கப்படும் என்றும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
“உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத் திட்டத்தின் கீழ் கம்பஹா மாவட்டத்தின் மஹர பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட 10 புதிய வீடுகளை பொது மக்களுக்கு கையளிக்கும் வைபவத்தில் கலந்து கொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு உரையாற்றினார்.
மஹர பிரதேச செயலகப் பிரிவில் கிரிமெடியாகாரஇ தலுபிட்டிய தெற்குஇ மஹர நுகேகொடைஇ ரன்முத்துகலஇ வேபொட கிழக்குஇ நாரங்வலஇ அட்டிகெஹெல்கல்ல மேற்குஇ விலிபுல தெற்கு மற்றும் வரபலான பகுதிகளில் இந்த வீடுகள் திறக்கப்பட்டன.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் “சுபீட்சத்தின் நோக்கு” கொள்கைப் பிரகடனத்திற்கு ஏற்பஇ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் அறிவூறுத்தலின் பேரில்இ கிராமிய வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை மற்றும் கட்டிடப் பொருட்கள் தொழில் மேம்பாட்டு இராஜாங்க அமைச்சினால் “உங்களுக்கு வீடு - நாட்டிற்கு எதிர்காலம்” தேசிய வீடமைப்புத் திட்டம் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
இந்த திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ் கிராம சேவையாளர் பிரிவூகளை உள்ளடக்கி நாடு முழுவதும் 14இ022 வீடுகள் நிர்மாணிக்கப்படும் அதே வேளை அதன் இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் கம்பஹா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சகன் பிரதீப்இ மஹர பிரதேச சபை உப தலைவர் அஜந்த விக்கிரமஆரச்சிஇ பிரதேச அரசியல்வாதிகள் மற்றும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை கம்பஹா மாவட்ட முகாமையாளர் அனில் பிரியந்த உட்பட பலரும்; கலந்து கொண்டனர்
No comments:
Post a Comment