உலகின் மிகப்பெரிய கையுறை உற்பத்தி நிறுவனம் - பறிமுதல் செய்யப்படும் என அமெரிக்கா அறிவிப்பு - News View

About Us

About Us

Breaking

Wednesday, March 31, 2021

உலகின் மிகப்பெரிய கையுறை உற்பத்தி நிறுவனம் - பறிமுதல் செய்யப்படும் என அமெரிக்கா அறிவிப்பு

கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்துவதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் உலகின் மிகப்பெரிய கையுறை உற்பத்தி நிறுவனமான மலேசியாவின் டொப் கிளோவ் நிறுவன உற்பத்திகள் பறிமுதல் செய்யப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கொவிட்–19 பரவலால் பாதுகாப்புக் கருவிகள் மீதான தேவை உலகெங்கும் அதிகரித்த நிலையில் டொப் கிளோவின் வருவாய் அதிகரித்ததோடு அதன் பங்கு விலையும் உயர்ந்தது. 

எனினும் ஆண்டுக்கு 96 பில்லியனுக்கும் அதிகமான கையுறைகளை தயாரிக்கும் இந்த நிறுவனம் புலம்பெயர் தொழிலாளர்களிடம் கொரோனா தொற்றை பரப்பியது உட்பட அண்மைக் காலத்தில் பல சர்ச்சைகளை சந்தித்துள்ளது. 

கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஊழியர்கள் துன்புறுத்தல் சந்தேகத்தின் பேரில் டொப் கிளோவ் நிறுவனத்தின் 2 துணை நிறுவனங்களின் இறக்குமதிக்கு அமெரிக்க சுங்க மற்றும் எல்லை பாதுகாப்புத் திணைக்களம் தடை விதித்தது.

அந்தத் தடை தற்போது, மலேசியாவில் உள்ள அனைத்து டொப் கிளோவ் தொழிற்சாலைகளில் செய்யப்படும் கையுறைகளுக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து டொப் கிளோவ் நிறுவனத்தின் பங்குகள் நேற்றுக் காலை சுமார் 5 வீதம் சரிந்தன.

No comments:

Post a Comment